எம்எச்370-இன் உடைந்த பாகங்களை தேட மடகாஸ்கர் செல்லும் பயணியரின் உறவினர்கள்

விபத்திற்குள்ளான மலேசியாவின் எம்ச்370 விமானத்தில் பயணம் செய்தோரின் உறவினர்கள், அந்த விமானத்திற்கு என்ன ஆனதென துப்பு கொடுக்கக்கூடிய உடைந்த பாகங்களை தேடி மடகாஸ்கருக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Australian Transport Safety Bureau

இந்த விமானத்தின் உடைந்த பாகமாக இதுவரை கிடைத்திருக்கும் அனைத்தும் கிழக்கு ஆப்ரிக்காவில் தான் கிடைத்துள்ளன.

எஞ்சியுள்ள உடைந்த பாகங்களைக் கண்டுபிடிக்க ஒழுங்கான தேடுதல் நடைபெறவில்லை என்றும், சில சாத்தியக்கூறான கண்டுபிடிப்புகள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளன என்றும் இந்த விமானத்தில் பயணித்தோரின் சில உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கூடுதலாக அறிய கீழுள்ள செய்தியை கிளிக் செய்யவும்

காணாமல் போன மலேசிய விமானம் கடலில் கட்டுப்பாடற்ற வகையில் இறங்கியிருக்கலாம் - அறிக்கை

மொரீஷியஸ் கடற்பகுதியில் காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகம்?

காணமல் போன மலேசிய விமானம் தொடர்பில் நஷ்டஈடு

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு செல்லுகின்ற வழியில் இந்த விமானம் காணாமல் போய்விட்டது.

சந்தேகப்படும்படியாக கிடைக்கின்ற அனைத்து உடைந்த பாகங்களையும் சேகரிப்பதை ஒருங்கிணைக்கின்ற பணியை மலேசியா மேற்கொண்டு வருகிறது. அந்த பாகங்களில் பல சோதனைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.

இதுவரை கிடைத்திருக்கும் ஆறு உடைந்த பாகங்களும் உறுதியாக இந்த விமானத்தினுடையதாக அல்லது அதனுடையதாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகின்றன.

இந்நிலையில், டிசம்பர் 3 முதல் 11 ஆம் நாள் வரை தங்களுடைய சொந்த செலவில் மடகாஸ்கார் சென்று உடைந்த பாகங்களை தேடப்போவதாக "வாய்ஸ் 370 குழு"-வின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க கீழுள்ள செய்திகளை கிளிக் செய்யவும்

மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து விட்டது - மலேசிய பிரதமர்

எங்கே விழுந்தது மலேசிய விமானம்? - புதிய தகவல்கள்

காணாமல் போன விமானத்தை சீனா தனது நிலப்பரப்பில் தேடுகிறது

இந்த விமானத்தில் பயணித்தோரின் உறவினர்களை ஒருங்கிணைத்து இந்த குழுவை நடத்தி வரும் கிரேஸ் சுபத்திரைநாதனின் தாயும் அந்த விமானத்தில் பயணித்திருக்கிறார்.

தானும், மலேசியர் மூவரும், சீனர் இருவரும், பிரான்ஸை சேர்ந்தவர் ஒருவரும் என மொத்தம் ஏழு பேர் மடகாஸ்கர் செல்ல இருப்பதாக கிரேஸ் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP

செப்படம்பரில் கிடைத்த சந்தேகத்திற்குரிய உடைந்த பாகங்களை ஆய்வு செய்வதில் தாமதமாவது குறித்த விமர்சனத்திற்கு பதிலளிக்கையில், கண்டுபிடிக்கப்பட்ட உடைந்த பாகங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து வருவதாகவும், சரிபார்க்கும் செயல்முறைகளை நடத்துவதற்கு அனைவரும் நிபுணர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனார்.

இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் மோதி விபத்திற்குள்ளாகி இருக்கலாம் என்று கருதப்படும் காணாமல் போயிருக்கும் இந்த விமானத்தில் 239 பேர் பயணம் செய்தனர்.

இந்த பகுதியில் ஆஸ்திரேலியாவின் தலைமையில் நடைபெறும் தேடுதலில் இன்னும் எந்த தடயமும் கிடைக்கவில்லை.

இதில் முக்கிய தடயம் எதுவும் கிடைக்காவிட்டால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த தேடுதல் கைவிடப்படவுள்ளது.