ஐரோப்பாவில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியின் போது தாக்குதல் நடக்க வாய்ப்பு: அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை

ஐரோப்பாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடக்கும் உச்சபட்ச ஆபத்து உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP

கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் உள்பட பல இடங்களில், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாத அமைப்பு மற்றும் அதன் இணை அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக தங்களுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதாக அமெரிக்க மக்களிடம் அந்நாட்டின் அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, பிரான்சில் உள்ள கிறிஸ்துமஸ் அங்காடிகளில் இரண்டு தனித்தனி தாக்குதல்கள் நடந்தன. இவ்விரு தாக்குதல்களிலும், அங்காடிகளில் பொருட்களை வாங்கி கொண்டிருந்தவர்கள் மீது வேன் அல்லது காரில் சென்ற தாக்குதல்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

சென்ற வார இறுதியில், பயஐரோப்பாவில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியின் போது தாக்குதல் நடக்க வாய்ப்பு: அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கைங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் ஏழு பேரை பிரான்ஸ் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்