கோஸ்டா ரிகாவை நெருங்கி வரும் சூறாவளி: அவசர நிலை அறிவிப்பு

கோஸ்டா ரிகா நாட்டின் எல்லையில் உள்ள கரீபிய கடற்பகுதியை நோக்கி ஒரு சூறாவளி நெருங்கி வருவதால், அந்நாட்டில் தேசிய அளவில் அவசர நிலை அறிவிக்கபட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கோஸ்டா ரிகாவை நெருங்கி வரும் சூறாவளி

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (இன்று மற்றும் நாளை) நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களை மூடிவிட கோஸ்டா ரிகா நாட்டின் அதிபர் லூயிஸ் கீல்யார்மோ சாலீஸ் உத்தரவிட்டுள்ளார்.

புயலின் நேரடி பாதையில் அமைந்திருக்கும் வீடுகளில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.. ஆனால், மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தங்கள் வீடுகளிலேயே தங்கி இருக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள்

முன்னதாக, ஓட்டோ புயல் சூறாவளியாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது கடற்கரைக்கு அப்பால் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இன்று, (வியாழக்கிழமை) இந்த சூறாவளி வடக்கு கோஸ்டா ரிகா மற்றும் தெற்கு நிகராகுவாவை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.