சிரியாவில் துருக்கி ராணுவத்தைச் சேர்ந்த மூன்று படையினர் கொலை

சிரியா அரசு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில், துருக்கி ராணுவத்தைச் சேர்ந்த மூன்று படையினர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் பலர் காயமடைந்ததாகவும் துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

வடக்கு சிரியாவில் உள்ள அல்-பாப் என்ற பிராந்தியத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது. இங்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பு மற்றும் குருது தீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்திய சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் படைக்கு துருக்கி ராணுவம் ஆதரவு அளித்து வந்தது.

இது உறுதி செய்யப்பட்டால், துருக்கியின் எல்லை தாண்டிய தாக்குதல் மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கியதில் இருந்து, சிரிய அரசு படையினரால் துருக்கி படையினர் கொல்லப்படும் முதல் சம்பவம் இதுவாகும்.

இந்தச் சம்பவம் துருக்கிக்கும் சிரியாவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்கும் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்