அமெரிக்க ஆயுதங்கள் ஐஎஸ் ஆயுதங்களாவதெப்படி?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்க, சவுதி ஆயுதங்கள் ஐஎஸ் ஆயுதங்களாவதெப்படி?

மொசூல் நகரை மீண்டும் கைப்பற்றுவதற்காக இராக்கிய இராணுவம் ஐஎஸ் அமைப்புடன் தீவிரமாக மோதிவரும் பின்னணியில், ஐஎஸ் அமைப்புக்கு ஆயுத பஞ்சம் இருப்பதாக தெரியவில்லை.

ஐஎஸ் அமைப்பின் ஆயுதங்களில் ஒரு தொகுதி,, மேற்குலக நாடுகளிடமிருந்து கிடைப்பதாக பிபிசியின் புலனாய்வு தெரிவித்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்கள் மற்றும் ஆயுத தளவாடங்களின் பெட்டிகளை பிபிசி அங்கே நேரில் கண்டது.

அவை அமெரிக்காவாலும் சவுதி அரேபியாவாலும் வாங்கப்பட்டவை. துருக்கி வழியாக சிரியாவிலுள்ள அமெரிக்காவும் சவுதியும் ஆதரிக்கும் ஆயுதகுழுக்களுக்கு அனுப்பப்பட்டவை.

ஆனால் அதற்கு பதிலாக இவை ஐஎஸ் அமைப்பின் கைகளில் சிக்கி அமெரிக்கா ஆதரிக்கும் இராக்கிய படைகளை கொல்ல பயன்படுகின்றன.

ஐஎஸ் அமைப்பை தோற்கடிக்க முயல்பவர்களின் ஆயுதங்களே, இந்த பிராந்தியத்தில் நிலவும் பெருங்குழப்ப களேபரத்தால், ஐஎஸ் அமைப்பின் ஆயுதங்களாக உருமாறிக்கொண்டிருக்கின்றன.

இது குறித்து இராக்கின் போர்க்கள சூழலிலில் பிபிசி மேற்கொண்ட பிரத்தியேக புலனாய்வுச் செய்தித்தொகுப்பு.