லூஃப்தான்ஸா விமானிகள் வேலைநிறுத்தம், 3 லட்சத்திற்கு மேலானோர் பாதிப்பு

விமானிகளின் வேலைநிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கின்ற நிலையில், ஜெர்மனி பயணியர் போக்குவரத்து நிறுவனமான லூஃப்தான்ஸாவின் 800-க்கு மேற்பட்ட விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2014 ஆம் ஆண்டு முதல் லூஃப்தான்ஸா விமான போக்குவரத்து நிறுவனத்தில் நடைபெறும் 14-வது வேலைநிறுத்தம் இது

இந்த விமானிகள் வைக்கின்ற சுமார் 4 சதவீத ஊதிய உயர்வு கட்டுபடியாகாது என்று லூஃப்தான்ஸா நிறுவனம் கூறுகிறது.

சமீபத்திய இந்த வேலைநிறுத்தம் புதன்கிழமை தொடங்கிய நிலையில், உள்நாட்டிலும், ஐரோப்பாவிலும் 3 லட்சத்திற்கு மேலான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2014 ஆம் ஆண்டு முதல் இந்த விமான போக்குவரத்து நிறுவனத்தில் நடைபெறும் 14-வது வேலைநிறுத்தம் இதுவாகும்.

தொடர்புடைய தலைப்புகள்