ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியால் விசாரிக்கப்பட இருக்கும் ஜேக்கப் ஸூமா

அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கட்சியின் நேர்மை ஆணையத்திற்கு முன்னால் தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா ஆஜர் ஆவார் என்று ஆளும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இன்கான்ட்லாவில் இருக்கும் அவருடைய சொந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட, சர்ச்சைக்குரிய பாதுகாப்பு மேம்பாடுகளுக்காக செலவு செய்த அரசின் நிதியில் சிறிதளவை, திருப்பி கொடுக்க ஆணையிட்ட அரசியில் சாசன நீதிமன்றத்தின் சமீபத்திய ஆணையை பற்றி அவரிடம் இந்த ஆணையம் விசாரிக்கும் என்று தெரிகிறது.

தான் தவறுகள் எதையும் செய்யவில்லை என்று அதிபர் மறுத்து வருகிறார்.

ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டோலாவோடு சிறையில் இருந்த ஆன்ட்ரூ மலான்கெனியின் தலைமையிலான இந்த ஆணையம், இந்த ஆண்டு நடைபெற்ற நகராட்சி தேர்தலில் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி பெற்றிருக்கும் மோசமான தோல்விகள் பற்றியும் ஸூமாவிடம் விசாரிக்கும் என தெரிகிறது.

1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, ஜேகன்ஸ்பார்க் மற்றும் பிரிட்டோரியா பெரு நகராட்சிகள் உள்பட பல பகுதிகளில் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்