ஐ எஸ் அச்சுறுத்தலால் நெருக்கடியில் இராக்கிய கிறிஸ்தவர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐ எஸ் அச்சுறுத்தலால் நெருக்கடியில் இராக்கிய கிறிஸ்தவர்கள்

கடந்த 2014ஆம் ஆண்டு இராக்கின் பெரும்பகுதிகளை இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் தீவிரவாதக் குழு கைப்பற்றியபோது, ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி வேறிடங்களுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அப்படிச் செல்ல முடியாமல் உள்ளூர்களில் சிக்கியவர்கள் அந்தத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர் அல்லது வலிந்து முஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்டனர்.

ஆனால், அந்தப் பகுதிகளை அரசும், அரச ஆதரவு ஆயுதக்குழுக்களும் கைப்பற்றியுள்ள நிலையில், வெளியேறிய கிறிஸ்தவர்களில் சிலர் அங்கு மீண்டும் திரும்பத் தொட்ங்கியுள்ளனர்.

அப்படி திரும்பியவர்களை மொசூல் நகருக்கு அருகிலுள்ள கராகோஷ் நகரில் சென்று சந்தித்தது பிபிசி.