காஸ்ட்ரோவின் மறைவைக் கொண்டாடும் அமெரிக்க புலம்பெயர் கியூபர்கள்

கியூபப் புரட்சியின் தந்தையும், கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானதை தொடர்ந்து, அமெரிக்க மாகாணமான ஃபுளோரிடாவில் உள்ள கியூப புலம்பெயர் மக்கள் செறிந்து வாழும் நகரான மையாமியின் தெருக்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

படத்தின் காப்புரிமை Joe Raedle
Image caption கோப்புப்படம்

பொதுமக்கள் தங்களுடைய கார்களில் ஒலிப்பான் மற்றும் உலோகத்தட்டு மூலம் சத்தங்களை எழுப்பியும், பட்டாசுகளை வெடித்தும் வருகின்றனர்.

மியாமியின் லிட்டில் ஹவானா மாவட்டம் , புலம் பெயர்ந்து வாழும் பல கியூப மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும்.

படத்தின் காப்புரிமை Joe Raedle
Image caption கோப்புப்படம்

'கியூபா வேண்டும், காஸ்ட்ரோ வேண்டாம்' என்ற கோஷங்களும் ஆங்காங்கே ஒலித்தன.

மக்கள் கூட்டமிகுந்த தெருக்களில் தடுப்புகளை அமைக்கும் கட்டாயத்திற்கு போலிசார் தள்ளப்பட்டுள்ளனர்.

ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு கொடூரமான சர்வாதிகார ஆட்சியை உருவாக்கியதாகவும், அங்கு அதிகார பூர்வ நிலைப்பாட்டிலிருந்து மிகச் சிறிய அளவு விலகினாலும் மக்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் கியூப ஜனநாயக இயக்குனரகத்தை சேர்ந்த ஓர்லாண்டோ க்யுட்டெரெஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு காந்த சக்தி மிகுந்த ஆளுமையாக திகழ்ந்தாலும், கியூபாவை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க கடினமாகவும் சில நேரங்களில் மோசமாகவும் நடந்து கொண்டதாக காஸ்ட்ரோவை பலமுறை சந்தித்த பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்