பாகிஸ்தானின் புதிய ராணுவ தலைமை தளபதியின் பெயர் அறிவிப்பு

பாகிஸ்தானின் அதிகாரம் மிகுந்த, செல்வாக்கு மிக்க பதவிகளில் ஒன்றான ராணுவ தலைமை தளபதி பொறுப்புக்கு, புதிய ஒருவரை அந்நாடு அறிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP

செவ்வாய்க் கிழமை இந்த பணி பொறுப்பை ஏற்கின்ற லெப்டினன்ட் தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா, ராணுவ தளபதியாக படையின் பெரியதொரு படைப்பிரிவுகளில் ஒன்றை வழிநடத்தியவராவார்.

ராணுவத்தின் பிரபலமான உயரிய தலைவராக பரவலாக பார்க்கப்பட்ட தளபதி ரஹீல் ஷெரிஃபுக்கு அடுத்தபடியாக யார் பொறுப்பேற்க இருக்கிறார் என ஊகங்கள் பல வாரங்களாக நிலவி வந்த சூழலில் இந்த செய்தி வந்திருக்கிறது.

காஷ்மீரில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்திருப்பதன் மத்தியில் இந்த மாற்றம் வந்திருக்கிறது.

ரஹீல் ஷெரிஃப் ஓய்வு பெறுகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்