அயர்லாந்து கருக்கலைப்பு சட்டத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துவது குறித்து இன்று ஆலோசனை

அயர்லாந்து கருக்கலைப்பு சட்டத்தின் மீது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தலாமா என ஆலோசனை செய்ய அயர்லாந்து அரசுக்கு அறிவுறுத்தும் ஒரு குழு இன்று சந்திக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அயர்லாந்தில் கருக்கலைப்பு குறித்து தொடரும் பிரச்சனை ( கோப்புப் படம்)

அயர்லாந்தில் உள்ள பெண்கள் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் மட்டும் தான் கருக்கலைப்பு செய்யமுடியும் என்ற விதி உள்ளது.

இதன் காரணமாக, நூற்றுக் கணக்கான அயர்லாந்து பெண்கள், கருக்கலைப்பு செய்ய வெளிநாட்டிற்குச் செல்ல நேர்கிறது.

100 அயர்லாந்து குடிமக்கள் அடங்கிய ஒரு குழு, அரசியல் அமைப்பில் கருக்கலைப்பிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள சூழ்நிலைகளைத் தாண்டி, மேலும் அதிக அளவிலான சூழ்நிலைகளில், கருக்கலைப்பை அனுமதிக்கும் வண்ணம் அயர்லாந்து அரசியல் சட்டத்தை மாற்றலாமா என்பது குறித்து மக்கள் வாக்களிக்க வாய்ப்பு தரலாமா என்பதை விவாதிக்கவுள்ளது.

கருக்கலைப்பு தொடர்பாக அரசியலமைப்பு மாற்றம் கொண்டுவரப்பட்டால், அது பிறக்காத மாற்றுத்திறனாளி குழந்தைகளின் உயிரை அச்சுறுத்தக்கூடிய ஒன்றாக இருக்கும் என கருக்கலைப்பு சட்டங்களை தளர்த்துவதை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.