ஃபிரான்ஸில் தொடங்கியுள்ள அதிபர் வேட்பாளருக்கான தேர்தல்

ஃபிரான்ஸில் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் மத்திய வலது சாரிக் கட்சியின் வேட்பாளராக தகுதி பெறுபவர் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தலை, இரண்டு முன்னாள் ஃபிரான்ஸ் பிரதமர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption குடியரசுக் கட்சியின் முதன்மை தேர்தலின் முதற்சுற்றில் வெற்றிப்பெற்ற ஃபிரான்ஸ்வா ஃபியோங்

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற குடியரசுக் கட்சியின் முதன்மை தேர்தலின் முதற்சுற்றில், ஃபிரான்ஸ்வா ஃபியோங் வலுவான நிலையில் வெற்றி பெற்றார் அதன் மூலம் அதிக வாய்ப்புள்ள நபராக அவர் தோன்றுகிறார்.

அவரின் போட்டியாளர் அலெங் சூபே, ஃபியோங்கின் தீவிர சீர்திருத்த திட்டம் கொடூரமான ஒன்று என்று தாக்கியுள்ளார். ஆனால் சூபே மாற்றத்திற்கான உண்மையான திட்டங்கள் இல்லாத, தற்போது இருக்கும் அதிகார அமைப்பைச் சேர்ந்தவர் என ஃபியோங் கூறியுள்ளார்.

ஆளும் சோஷலிஸ்ட் கட்சி ஃபிரான்ஸ் வாக்காளர்கள் மத்தியில் அதிக செல்வாக்கற்ற கட்சியாக மாறிக்கொண்டு வருவதாக கருத்துக் கணிப்புகள் கூறுவதால், இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் ஃபிரான்ஸின் அதிபராகலாம் என பரவாலக எதிர்ப்பார்க்கப்படுகிறது.