காங்கோ: நன்தே இன ஆயுதப்படை தாக்குதலில் 30 பேர் பலி

கிராமம் ஒன்றில் நன்தே இன ஆயுதப்படை நடத்திய ஒரு தாக்குதலில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக காங்கோ ஜனநாயகக் குடியரசின் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP

நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் வட கிவு-வில் நடைபெற்ற இநத தாக்குதலில் இறந்தோரில் பெரும்பாலோர் நன்தே இனத்தின் நீண்டகால எதிரிகளான ஹூட்டூ மக்களாகும். பலர் நீண்ட கத்திகளால் கொலை செய்யப்பட்டனர்.

அதிக கனிமத்தாது வளங்கள் உடைய காங்கோவின் கிழக்கு பகுதியில் அடிக்கடி நடைபெறும் வன்முறை மோதல்களில் பெரும்பாலானவை இன ஆயுதப்படைகளால் நடத்தப்படுபவையாகும்.

ஹூட்டூ இன ஆயுதக்குழுக்களுக்கு எதிராக கடந்த ஆண்டு, காங்கோ அரசு தாக்குதல் ஒன்றை தொடங்கியது.

இந்த ஆயுதக் குழுக்களில் சிலர், 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலைக்கு பின்னர், நாட்டை விட்டு தப்பியோடிவிட்டனர்.

தொடர்புடைய தலைப்புகள்