அலெப்போ கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருந்து அரசு கைப்பற்றிய இரண்டாவது மாவட்டம்

அலெப்போ நகரின் கிழக்கே கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இரண்டாவது மாவட்டத்தையும் கைப்பற்றியிருப்பதாக சிரியா அரசு படைப்பிரிவுகள் கூறியுள்ளன.

படத்தின் காப்புரிமை AFP

அரசு படையும், கூட்டாளிகளும் சேர்ந்து, ஜபால் பட்ரோ மாவட்டத்தை தங்களுடைய முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

சில மணிநேரங்களுக்கு முன்னால், ஹனானோ மாவட்டம் தற்போது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை கிளர்ச்சியாளர்கள் உறுதி செய்திருந்தனர்.

அரசு மற்றும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொது மக்கள் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கின்ற இந்த நகரத்தின் பகுதியை பாதியாக குறைத்துவிடும் முயற்சியோடு அரசு படைப்பரிவுகள், அதன் கிழக்குப்புற பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.