ஃபிரான்ஸ் அதிபருக்கான முதன்மை தேர்தலில் மத்திய வலதுசாரி வேட்பாளராக ஃபியோங் தேர்வு

ஃபிரான்ஸில் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான மத்திய வலதுசாரி கட்சியின் வேட்பாளராக விவாதத்திற்கு இடமின்றி ஃபிரான்ஸ்வா ஃபியோங் வெற்றிப் பெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மகிழ்ச்சி ஆராவாரங்களை எழுப்பிய ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஃபியோங்

முதன்மை தேர்தலில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் மற்றொரு முன்னாள் பிரதமரான அலேன் சூபேவை, ஃபியோங் தோற்கடித்துள்ளார்.

அடுத்த வருடத் தேர்தலில் இன்னும் நியமிக்கப்படாத சோசியலிஸ்ட் கட்சி வேட்பாளர் மற்றும் தீவிர வலது சாரிக் கட்சி வேட்பாளர் மரீன் ல பென் ஆகியோரை எதிர்கொள்ளவுள்ளார் ஃபியோங்.

மகிழ்ச்சி ஆராவாரங்களை எழுப்பிய ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஃபியோங், ஃபிரான்ஸ் எதிர்கொண்டு வரும் நெருக்கடியின் தீவிரத்தை தான் புரிந்து கொண்டதாகவும் மேலும் நாட்டின் மனோநிலையில் முழுமையான மாற்றம் என்று தான் கருதும் மாற்றத்தை கொண்டுவரப்போவதாகவும் உறுதியளித்தார்.

ஃபியோங் பொது சேவைகளை குறைப்பது மற்றும் தொழிற் சந்தையில் சீர்த்திருங்களை கொண்டுவருவது ஆகியவை அடங்கும் தளர்வு பொருளாதார திட்டத்தை முன்வைத்து தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளார்.