சான் ஃபிரான்சிஸ்கோவில் பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் ஊடுருவிய ஹேக்கர்கள்

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் பொதுப் போக்குவரத்து அமைப்புகளைக் குறிவைத்த கணினி வலையமைப்பை உடைத்து நாசம் செய்பவர்கள் (ஹேக்கர்கள்) தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் மற்றும் கணினி முனையங்களை செயலிழக்க வைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

படத்தின் காப்புரிமை Adam Berry
Image caption கோப்புப்படம்

கடந்த வெள்ளிக்கிழமையன்று தொடங்கிய இந்த ஊடுருவலால், பொதுமக்கள் அமைப்பிற்குள் இலவசமாக பயணம் செய்ய வழிவகுத்தது.

சுமார் 70 ஆயிரம் டாலர்கள் பிணைத்தொகை கேட்டு இந்த நாசவேலை செய்பவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக நகர அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதன் காரணமாக இயங்கிக் கொண்டிருந்த சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஞாயிறன்று, பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின.

ஆனால், இந்த கணினி ஊடுருவலானது முடிந்துவிட்டதா அல்லது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்