அமெரிக்கா - கியூபா இடையேயான உறவு: எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் டிரம்ப்

ஜனவரி மாதம் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்கும் போது, அமெரிக்கா - கியூபா இடையேயான உறவை சீரமைக்கும் பராக் ஒபாமாவின் கொள்கைகளை திரும்பப்பெறப்போவதாக டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்கா - கியூபா இடையேயான உறவை சீரமைக்கும் பராக் ஒபாமாவின் கொள்கைகளை திரும்பப்பெறப்போவதாக பின்வாங்கப்போவதாக டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவுக்கும், அமெரிக்கா வாழ் கியூபர்களுக்கும், கியூப மக்களுக்கும் ஏதுவான சிறந்த திட்டத்துடன் கம்யூனிஸ்ட் அரசாங்கமான கியூபா தயாராக இருப்பதை சார்ந்தே கியுபாவுடனான உறவுகள் மீண்டும் கட்டமைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மறுசீரமைத்து முறுகல் நிலையை போக்க அதிபர் ஒபாமா பணியாற்றினார்.

முன்னர், ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு மிருகத்தனமான சர்வாதிகாரி என்றும், சொந்த மக்களை பல தசாப்தங்களாக அடக்கி வைத்திருந்தார் என்று டிரம்ப் வர்ணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்