டிரம்ப் அளித்த வாக்குறுதிகளால் அடுத்த இரு ஆண்டுகளில் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என தகவல்

அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், நிதி செலவிடுவதற்கான திட்டம் மற்றும் வரி குறைப்புகள் குறித்து வழங்கிய உறுதிமொழிகள் காரணமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டிரம்ப் அளித்த வாக்குறுதிகளால் அடுத்த இரு ஆண்டுகளில் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என ஒஇசிடி கருத்து

மற்ற அரசாங்கங்களும் உலகளாவிய பொருளாதாரத்தை அதிகரிக்க இதே போன்ற கொள்கைகளை பயன்படுத்தலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், வர்த்தகத்தை கட்டுப்படுத்தவும், தொழிற்சாலைகளை பாதுகாக்கவும் விதிக்கப்படும் எவ்விதமான நடவடிக்கைகள் எடுத்தாலும் அது இந்த நன்மைகளை மட்டுப்படுத்தும் விதமாக அமையக்கூடும் என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்