ஃபுக்குஷிமாவை சுத்தப்படுத்தும் செலவு இரண்டு மடங்கிற்கு மேலாக அதிகரிப்பு

ஃபுக்குஷிமாவில் இருக்கும் கதிரியக்கப் பொருட்களை அகற்றுவது, சேதமடைந்த இந்த அணு உலைக்கு அருகில் வாழ்ந்த பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவற்றிற்கு ஆகும் செலவு இரண்டு மடங்குக்கு மேலாக அதிகரித்திருப்பதாக ஜப்பானிய அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும், சுனாமி என்கிற ஆழிப்பேரலையாலும் சேதமடைந்த அணு உலையை சுற்றியிருக்கும் நகரங்களையும், கிராமங்களையும் சுத்தம் செய்ய, 180 பில்லியன் டாலருக்கு மேலாக செலவாகும் என்று அந்நாட்டின் வர்த்தக அமைச்சகம் மதிப்பிட்டு இருப்பதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஃபுக்குஷிமாவை சுற்றியுள்ள பகுதியில் வாழ்ந்து, வெளியேற கட்டாயப்படுத்தப்பட்ட லட்சக்கணக்கானோரும் நீண்டகால இழப்பீடு பெறுவர்.

இவ்விடத்தை சுத்தப்படுத்துவதற்கான தொகையை இந்த அணு உலையின் உரிமையாளரான டிஇபிசிஒ நிறுவனம் வழங்கும் என்று ஜப்பானிய ஆட்சியாளர்கள் உறுதி அளித்திருந்தனர்.

ஆனால், இந்த சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவில் பெரும்பான்மையை அதிக மின் கட்டணம் மூலம் ஜப்பானின் பொது மக்கள்தான் தாங்க வேண்டும் என்று இப்போது இந்நிறுவனம் கூறியிருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்