கால்பந்து விளையாட்டு ஊதியத்திலும் சிலர் சிரிப்பார் பலர் அழுவார் கதைதான்!

கால்பந்து விளையாட்டில் மிக உயர்மட்டத்தில் இருக்கும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகை, உலகம் முழுவதும் உள்ள தொழில்முறை கால்பந்து விளையாட்டு வீரர்களின் நிலை குறித்த ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Rex Features

கால்பந்து விளையாட்டு வீரர்களின் சம்பளம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த, சுமார் 14,000 விளையாட்டு வீரர்களில் பாதிப் பேர் தாங்கள் மாதம் வெறும் 1,000 டாலர்களுக்கும் குறைவாக பெறுவதாகத் தெரிவித்தனர்.

10 வீரர்களில் நான்கு பேர் தங்களின் சம்பளம் தாமதித்து வழங்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

14 வீரர்களில் ஒருவர், தன்னை சூதாட்டக்காரர்கள் அணுகியதாகத் தெரிவித்தார்.

மிகப் பெரிய மற்றும் மிகவும் இலாபகரமான கால்பந்தாட்டக் குழுக்கள் இருக்கும் நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளைத் தவிர்த்து மற்ற நாடுகளில் தொழில்முறை கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு மூலம் 54 நாடுகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.