கொலம்பியாவில் விமான விபத்து : பிரேசில் கால்பந்துக் குழுவினர் உட்பட 72 பேர் கதி என்ன ?

பொலிவியாவிலி்ருந்து கொலம்பியா வந்து கொண்டிருந்த தனியார் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிவிட்டதாக கொலம்பியாவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

Image caption விமான விபத்து நடந்த மெடலின் நகரைக் காட்டும் படம்

கொலம்பியாவின் மெடலின் நகரை அந்த விமானம் அணுகிக் கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து நடந்திருப்பதாகத் தெரிகிறது.

அவ்விமானத்தில் 72 பயணிகள் இருந்தனர்.

தனியாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட இந்த விமானத்தில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த சப்பகோயென்ஸ் கால் பந்து குழுவினர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இக்குழுவினர் மெடலின் நகரைச் சேர்ந்த அட்லெடிகோ நேசியோனால் கால்பந்து குழுவுடன் தென் அமெரிக்கக் கால்பந்து கிளப் கோப்பையின் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளவிருந்தனர்.