அதிபர் ஸூமா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு

தென் ஆப்ரிக்காவை ஆளுகின்ற கட்சியான ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு, அதிபர் ஜேக்கப் ஸூமா பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP/getty

அவருடைய அமைச்சர்களில் ஒருவரால் கொண்டு வரப்பட்ட இந்த கோரிக்கை, இக்கட்சியின் தேசிய செயற்குழுவில் நீண்டநேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவாதம் கூச்சல் மிகுந்ததாக, நேர்மையானதாக, சில வேளைகளில் கடினமானதாக இருந்தது என அக்கட்சியின் அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவரது நண்பர்கள் என்று அவர் கூறிய ஒரு செல்வந்த குடும்பம் அரசியலில் காட்டிய செல்வாக்கு ஆகியவற்றால் ஸூமாவின் நிலைமை ஆட்டங்கண்டுள்ளது.

அதிபர் ஸூமா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற சவாலை சநதிப்பது இது முதல் முறையல்ல.

ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஸூமா கியூபா சென்றிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்