கொலம்பிய விமான விபத்து: பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

படத்தின் காப்புரிமை AP

ஏறக்குறைய சப்பகோயென்ஸ் கால்பந்து அணியினர் அனைவரையும் பலிவாங்கியிருக்கும் விமான விபத்தில் இறந்தோருக்கு அஞ்சலி செலுத்த 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பிரசிலிய அதிபர் மைக்கேல் டெமர் அறிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP

கொலம்பியாவின் மெடலின் நகரை அந்த விமானம் அணுகிக் கொண்டிருந்த வேளையில், மோசமாக காலநிலையால் மலைப்பாங்கான இடத்தில் வைத்து விழுந்து நொறுங்கிய இந்த விமானத்தில் கால்பந்து விளையாட்டு வீரர்கள், செய்தியாளர்கள், விமான ஊழியர்கள் என மொத்தம் 81 பேர் பயணம் செய்தனர்.

பெரும்பாலோர் பலியாகியுள்ளனர். மின்சார கோளாறு ஏற்பட்டதாக விமானி தகவல் அளித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA/BIA PIVA / DIARIO DO IGUACU

பிரேசிலின் தெற்கு பகுதியை சேர்ந்த சிறியதொரு அணியான சப்பகோயென்ஸ் கால்பந்து அணி, அடிமட்ட நிலையிலிருந்து உயர்ந்து, தென் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய கிளப் போட்டியின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.

இந்த போட்டிக்கான கோப்பையை சப்பகோயென்ஸ் கால்பந்து அணிக்கே வழங்கலாம் என்று அந்த அணி மோதவிருந்த மெடெலின் அட்லெடிகோ நேஷனல் கால்பந்து அணியின் தலைவர் யோசனை கூறியிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்