பாகிஸ்தானின் தலைமை ராணுவ தளபதியாக ஜாவித் பாஜ்வா பொறுப்பேற்பு

பாகிஸ்தானின் புதிய தலைமை ராணுவதளபதியாக கமர் ஜாவித் பாஜ்வா பொறுப்பேற்றுக் கொண்டார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஜாவித் பாஜ்வா

தான் ராணுவ தலைமை தளபதியாக பதவி வகித்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தியதாக பாராட்டப்பட்ட முந்தைய தலைமை ராணுவ தளபதியான ரஹீல் ஷெரிஃப் தற்போது ஒய்வு பெறுகிறார்.

ஜாவித் பாஜிவா தலைமை ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு அடையாளமாக அவரிடம் பாரம்பரிய கோலினை ரஹீல் ஷெரிஃப் வழங்கினார்.

ஒய்வு பெறும் முன்னர் உரையாற்றிய ரஹீல் ஷெரிஃப், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானின் தலைமை ராணுவ தளபதியாக பணியாற்ற தயார் செய்யப்பட்ட 5 பெயர்கள் அடங்கிய சிறுபட்டியலில் இருந்து இப்பதவிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் பாஜ்வாவைத் தேர்ந்தெடுத்தார்.

தொடர்புடைய தலைப்புகள்