ஒஹையோ பல்கலைக்கழகத் தாக்குதல்-பயங்கரவாதச் செயலா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஒஹையோ பல்கலைக்கழகத் தாக்குதல்-பயங்கரவாதச் செயலா?

அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று பயங்கரவாதத் தாக்குதலா என்பது குறித்து புலனாய்வு செய்யப்படுவதாக காவல்துறை கூறியுள்ளது.

சோமாலிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரால் நடத்தப்பட்ட அத்தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர்.

பாதசாரிகள் நிறைந்திருந்த பகுதியில், வேகமாக வாகனத்தை செலுத்திய அந்த நபர் பின்னர் வெட்டுக்கத்தி ஒன்றின் மூலம் கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தினார்.

அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே அவரைச் சுட்டுக்கொன்றனர்.