இரான் ஒப்பந்தத்தை முறிப்பது முட்டாள்தனம்: டிரம்புக்கு சிஐஏ இயக்குநர் எச்சரிக்கை

அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, இரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தான் கிழித்தெறியப் போவதாக டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியபடி அவர் நடந்து கொண்டால், அது பேரழிவாகவும், அதிகபட்ச முட்டாள்தனமாகவும் அமையும் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான சிஐஏ அமைப்பின் இயக்குநர் ஜான் பிரன்னன்எச்சரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜான் பிரன்னன்

புதிதாக பொறுப்பேற்கவுள்ள டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவின் வாக்குறுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும், சிரியாவில் வேண்டுமென்றே நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டுமென்றும் பிபிசிக்கு அளித்த பேட்டியில் ஜான் பிரன்னன் தெரிவித்தார்.

வெளியுறவுத் துறை விவகாரங்களில் அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ஒபாமாவின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை டிரம்ப்பும், வரவிருக்கும் அவரது அரசும் கைவிடக்கூடாது என்று கேட்டுக் கொண்ட சிஐஏ இயக்குநர், இதில், டிரம்ப் நிர்வாகம் ஒழுங்கு மற்றும் மதிநுட்பத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், விசாரணை முறைகளில் ஒன்றாக விசாரணை செய்யப்படுபவர்களையும், சந்தேக நபர்களையும் நீரில் சித்ரவதை செய்யும் வாட்டர் போர்டிங் முறைக்கு எதிராகவும் ஜான் பிரன்னன் கருத்து வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்