விபத்தில் நால்வர் பலியான ஆஸ்திரேலிய பொழுதுபோக்கு பூங்கா மீண்டும் திறக்கப்படுகிறது

கடந்த அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பலியான ட்ரீம்வேர்ல்ட் என்ற ஆஸ்திரேலிய பொழுதுபோக்கு பூங்கா வரும் டிசம்பர் 10-ஆம் தேதியன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ட்ரீம்வேர்ல்ட் பொழுதுபோக்கு பூங்கா

இந்தப் பொழுதுபோக்கு பூங்காவில் அமைந்துள்ள நீர் கேளிக்கை விளையாட்டான தண்டர் ரிவர் ரேபிட்ஸ் ரைட் எனப்படும் ஆற்றில் விரைவாக நீர் சவாரி செய்யும் பிரிவில், ஆறு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். அதற்கு பிறகு இந்த பொழுதுபோக்கு பூங்கா மூடப்பட்டிருந்தது.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள மிகப் பிரபலமான கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் அமைந்துள்ள இந்த பொழுதுபோக்கு பூங்காவின் உரிமையாளர்கள், தாங்கள் விபத்து நடந்த நீர் சவாரி பிரிவை இடிக்கப் போவதாகவும், இந்த பூங்காவில் பார்வையாளர்களை ஈர்க்கும் மற்ற இடங்களில் ஒரு சுயாதீன பாதுகாப்பு ஆய்வினை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

விபத்தால் நிகழ்ந்த மரணங்கள் குறித்து நடத்தப்படும் கரோனர் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய தலைப்புகள்