அதிபர் பதவிக்காக சொந்த வர்த்தகத்தை கைவிடப்போவதாக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது சொந்த வர்த்தக வேலைகளை விட்டுவிடப்போவதாக அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP

அமெரிக்க அதிபராக செயல்படும் தனது பொறுப்பில் கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்மாதிரியான முடிவை எடுப்பதற்கு தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் தனது தொழிலுக்கும் தனது பதவிக்கும் இடையில் முரண்பாடு வராமல் இருக்க இப்படி ஒரு முடிவை எடுத்ததாக அடுத்தடுத்த டிவிட்டர் செய்திகளில் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலும் விவரங்களை, டிசம்பர் மாதத்தின் இடைத் தேதிகளில், தனது குழந்தைகளுடன் சேர்ந்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவிக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

டிரம்பின் மருமகன் ஜரெட் குஷ்னெர் இடைக்காலத்தில் முதன்மை அரசியல் ஆலோசகர்களில் ஒருவர், மேலும் அவரின் மூன்று மூத்த குழந்தைகள் பல்வேறு நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்