ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி அடங்கிய வாகனம் பயணம்

கியூபாவின் மறைந்த தலைவர், ஃபிடல் காஸ்ட்ரோவின் சாம்பல் அடங்கிய குடுவை க்யூபா முழுவதுமான தனது நான்கு நாள் பயணத்தை தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கண்ணாடி பெட்டிக்குள் சாம்பல் குடுவையை ஏற்றிச் செல்லும் ராணுவ வாகனம்

கண்ணாடி பெட்டிக்குள் சாம்பல் குடுவையை ஏற்றிச் செல்லும் ராணுவ வாகனத்திற்கு தங்களது மரியாதையை செலுத்த அதிக அளவிலான மக்கள் கூட்டம் ஃபிடல் காஸ்ட்ரோவின் பெயரை கோஷமிட்டும், கியூபாவின் கொடியை அசைத்தும் தலைநகர் ஹவானாவில் அணி வகுத்து நிற்கும் காட்சிகளை தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.

இந்த அஸ்தி அடங்கிய வாகனம், புரட்சி தொடங்கிய சாண்டியாகோ டே கியூபாவை நோக்கிய நான்கு நாள் பயணத்தை தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் ஃபிடல் காஸ்ட்ரோவின் பெயரை கோஷமிட்டும், க்யூபாவின் கொடியை அசைத்தும் தலைநகர் ஹவானாவில் அணி வகுத்து நின்றனர்

காஸ்ட்ரோ 1959 ஆம் ஆண்டு கியூபாவில் நடந்த ஆட்சியை தூக்கியெறிந்து தனது வெற்றி அணி வகுப்பை நடத்திய பாதையின் முடிவிலிருந்து தொடக்கத்திற்கு காஸ்ட்ரோவின் அஸ்தி அடங்கிய இந்த வாகனம் பயணிக்கவுள்ளது.

காஸ்ட்ரோவின் சாம்பல் ஞாயிறன்று அடக்கம் செய்யப்படவுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்