எரிபொருள் இல்லாததால் சப்பகோயென்ஸ் கால்பந்து அணியினர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதா?

பிரேசிலை சேர்ந்த சப்பகோயென்ஸ் கால்பந்து அணி வீரர்களில் பெரும்பாலோனோர் விமான விபத்தில் உயிரிழந்ததற்கு காரணம் அவர்கள் பயணம் செய்த விமானத்தில் எரிபொருள் இல்லாதது தான் என்று அண்மையில் கசிந்துள்ள ஒரு ஒலிப்பதிவு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

மின்சாரப் பழுதின் காரணமாகவும், விமானத்தில் எரிபொருள் இல்லாதாலும் அவசரமாக தரையிறங்க மீண்டும் மீண்டும் ஒரு விமானி அனுமதி கேட்பது அந்த ஒலிப்பதிவில் பதிவாகியுள்ளது.

சப்பகோயென்ஸ் கால்பந்து அணியினர் பயணம் செய்த இந்த தனியார் விமானத்தில் இருந்த 77 பேரில் 6 பேர் மட்டுமே விபத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை மாலையில், கோபா சூடமெரிக்கானா தொடரின் இறுதியாட்டத்தில் சப்பகோயென்ஸ் கால்பந்து அணி விளையாடுவதாக இருந்தது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தனது விருப்பமான கால்பந்து அணியை இழந்து விட்ட சோகத்தில் ஒரு சிறுமி

இறந்த வீரர்களின் நினைவாக போட்டி நடக்க இருந்த மைதானத்தில் ரசிகர்கள் குழுமியுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்