பாலியல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு: விசாரணையை துவங்கியுள்ள செல்ஸீ கால்பந்து கிளப்

செல்ஸீ கால்பந்து கிளப்பில் 1970-களில் விளையாடி, பின்னர் உயிரிழந்த ஒருவர் தொடர்பாக விசாரிக்க சட்ட நிறுவனம் ஒன்றை பணியமர்த்தியுள்ளதாக செல்ஸீ கிளப் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

கால்பந்து விளையாட்டில், பல ஆண்டுகளாக நடப்பதாகக் கூறப்படும் குழந்தை பாலியல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக் குறித்து விசாரித்து வரும் கால்பந்து சங்கத்துக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் வழங்கப்படும் என செல்ஸீ தெரிவித்துள்ளது.

ஐக்கிய ராஜ்ஜியம் முழுவதும் 11 போலீஸ் படையினர், இதுதொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் சாரணர் ஒருவரால், அந்த கிளப்பில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக, செல்ஸி இளைஞர் அணியைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சாட்டியது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக பிரிட்டன் நாளிதழ் ஒன்று கூறுகிறது.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், பாதிக்கப்பட்ட வீரருக்கு செல்ஸீ, தொகை ஒன்றை வழங்கியதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்