அலெப்போவில் குழந்தைகளை மகிழ்வித்த `கோமாளி' மனிதர் பலியான சோகம்

சிரியாவின் அலெப்போ நகரில் கடந்த தினங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பலியான பலரில், கோமாளி வேடம் அணிந்து குழந்தைகளை மகிழ்விக்கும் சமூக பணியாளரும் ஒருவர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதிகளில், குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்தின் மூலம் பணியில் அமர்த்தப்பட்ட அனஸ் அல் பாஷா, வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அனஸ் அல் பாஷா அலெப்போவை விட்டு வெளியேற மறுத்துவிட்டார் என்றும் மிகவும் சோகமான மற்றும் அதிக ஆபத்தான இடமான அலெப்போவில் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள அவர் முயற்சித்தார் என்றும் அல் பாஷாவின் சகோதரர் மகமொத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்