தாய்லாந்தின் அடுத்த அரசராக அதிகாரப்பூர்வமாக முடிசூட உள்ளார் மஹா வஜிரலோங்கோன்

நாட்டின் அடுத்த அரசராக இளவரசர் மஹா வஜிரலோங்கோனை தாய்லாந்து முடிசூட உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மஹா வஜிரலோங்கோன்

கடந்த அக்டோபர் மாதம் மறைந்த அரசர் பூமிபோன் அடூன்யடேட் கெளரவிக்கும் வகையில் நடைபெற்ற ஒரு மத சேவை கூட்டத்தில் இளவரசர் மஹா வஜிரலோங்கோன் கலந்து கொண்டார்.

இளவரசர் மூத்த அதிகாரிகளை சந்திக்க உள்ளார். அவர்கள் அதிகாரபூர்வமாக கிரீடத்தை இளவரசரிடம் வழங்குவார்கள்.

இந்த விழா குறித்த பகட்டான நிகழ்வுகளையும் மீறி, தற்போது புதிய அரசராக முடிசூட உள்ள இளவரசர் மஹா வஜிரலோங்கோன் தன் தந்தைக்கு கிடைந்த மரியாதையை எப்போதாவது இவர் பெறுவாரா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளது.

மறைந்த அரசர் பூமிபோன் அடூன்யடேட் தாய்லாந்தில் பரவலாக மதிப்பை பெற்றவராகவும், ஸ்திரப்படுத்தும் சக்தியாக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்