அலெப்போவில் மனிதாபிமான பாதைகளை திறப்பது குறித்து விவாதிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ஐ.நா தகவல்

அலெப்போவில் பாதுகாப்பான மனிதாபிமான பாதைகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க தான் தயாராக இருப்பதாக ரஷ்யா கோடிகாட்டியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அலெப்போவில் மனிதாபிமான பாதைகளை திறப்பது குறித்து விவாதிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ஐ.நா தூதர் ஜான் ஈக்லேண்ட் தகவல்

இந்த மனிதாபிமான பாதைகள் கிழக்கு அலெப்போவில் முற்றுகைக்கு உள்ளாகி இருக்கும் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கும் பொதுமக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகம் செய்ய பயன்படலாம் என்று ஐ.நா தூதர் ஜான் ஈக்லேண்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது அங்கு நிலவும் சூழ்நிலை மிகவும் பயங்கரமாக இருப்பதாகவும், மருத்துவ அறுவை சிகிச்சைகள் மயக்க மருந்துகளின்றி நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் அரசு ஆதரவு பெற்ற படைகளால் தீவிர அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளது.

சமீப நாட்களில் பல சுற்றுப்புற பகுதிகளை அரசு ஆதரவு பெற்ற படையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.