ஓய்வு பெற்ற தளபதியை பாதுகாப்பு செயலராக நியமித்தார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நடைபெறுகின்ற முதலாவது பேரணியில், ஓய்வு பெற்றிருக்கும் ஜேம்ஸ் மேட்டிஸை புதிய பாதுகாப்பு செயலராக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பரந்த அளவிலாக போர்க்கள அனுபவம் பெற்றவர்

'பைத்தியக்கார நாய்' என்று அறியப்படும் முன்னாள் சிறப்புப் படை வீரரான மேட்டிஸ், தன்னுடைய போர் தந்திர சிந்தனை, கடுமையான மொழி பயன்பாடு மற்றும் இரானிடம் நம்பிக்கையின்மை ஆகிய பண்புகளால் பிரபலமானவர்.

இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பரந்த அளவிலாக போர்க்கள அனுபவம் பெற்றவர்.

தளபதி ஜார்ஜ் பேட்டனை போல செயல்படுகிற மற்றும் நம்மில் சிறந்தவர் ஜேம்ஸ் மேட்டிஸ் என்று ஒஹையோவில் ஆரவாரித்த கூட்டத்திற்கு மத்தியில் உரையாற்றிய போது டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

இரண்டாம் உலக போர்க் காலத்தில் அமெரிக்க தளபதியாக இருந்த ஜார்ஜ் பேட்டனை "மூத்த துணிகர தளபதி என்று அவரது படையணிகள் குறிப்பிட்டிருந்தன.