பிரிட்டன்: பிரெக்ஸிட்டை எதிர்த்த ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி

Image caption பிரெக்ஸிட் பிரச்சனையை மையமாக வைத்து லிபரல் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சாரா ஒல்னி அரசியல் பிரசாரம் மேற்கொண்டார்

"பிரெக்ஸிட் இடைத்தேர்தல்" என்று வர்ணிக்கப்பட்ட , லண்டன் புறநகர்ப் பகுதியான, ரிச்மண்ட் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகவேண்டும் என்ற முடிவை எதிர்த்த ஒரு வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை PA
Image caption சாரா ஒல்னி 20,510 வாக்குகளும், கோல்ட்ஸ்மித் 18,638 வாக்குகளும் பெற்றனர்

லிபரல் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சாரா ஒல்னி, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஆதரவான ஸக் கோல்ட்ஸ்மித்தை வென்றிருக்கிறார்.

ஜூன் மாதம் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு நடைமுறைகளை தொடங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது என்று செய்தியாளார்கள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption இந்த இடைத்தேர்தலில் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தின் விரிவாக்கத்தை எதிர்ப்பதற்காக கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினரான கோல்ட்ஸ்மித் இந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்