நைஜீரியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டினியால் மரணத்தை தழுவும் அபாயம் : ஐ.நா எச்சரிக்கை

வடகிழக்கு நைஜீரியாவில் போகோ ஹராம் கிளர்ச்சியால் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டினி காரணமாக மரணத்தை தழுவும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நைஜீரியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டினியால் மரணத்தை தழுவும் அபாயம் : ஐ.நா எச்சரிக்கை

முன்னர் போகோ ஹராம் தீவிரவாத குழுவினரின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும் பரப்பிலான பகுதிகளை நைஜீரியா ராணுவம் மீண்டும் கைப்பற்றியதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஆனால், பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதால், விவசாயிகளால் பயிர்களை நட முடியவில்லை.

மனிதாபிமான உதவிகளை அவசரமாக எதிர்நோக்கி சுமார் 7 மில்லியன் மக்கள் தவித்து வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் ஆஃப்ரிக்கா எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய நெருக்கடி நிலை என்று ஐ.நா, வர்ணிக்கும் நிலையை எதிர்கொள்ள ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி வேண்டி உலக நாடுகளுக்கு அது கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்