கிழக்கு அலெப்போவிலிருந்து தப்பியோடும் ஆண்களை தடுப்புக்காவலில் வைக்கும் சிரியா அரசு படை

அலெப்போவின் போராளிகள் வசமுள்ள கிழக்கு பகுதியிலிருந்து தப்பியோடும் ஆண்கள் மற்றும் சிறுவர்களை சிரியா அரசு படையினர் தடுப்பு காவலில் வைத்திருப்பது பற்றி மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கிழக்கு அலெப்போவிலிருந்து தப்பியோடும் ஆண்களை தடுப்புக்காவலில் வைக்கும் சிரியா அரசு படை

அந்த பகுதியிலிருந்து தப்பிக்கும் பொதுமக்களை போராளிகள் சுடுவதாகவும், சில சமயங்களில் கொன்றுவிடுவதாகவும் ஐ.நாவின் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

போராளி குழுக்கள் வசமிருந்த சுமார் பாதி பகுதியை அரசப் படைகள் கைப்பற்றியுள்ள நிலையில், இதுவரை சுமார் 31,500 பேர் கிழக்கு அலெப்போவிலிருந்து தப்பியோடி உள்ளதாக ஐ.நாவின் தொண்டு நிறுவனம் கணித்துள்ளது.

அலெப்போவில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் பகுதிகளில் மனிதாபிமான பாதைகளை திறக்க ரஷ்யா பரிந்துரைத்துள்ள திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்