லிபியாவில் ஆயுதக்குழுக்களுக்கு இடையில் 2-வது நாளாக தொடரும் சண்டை

இரண்டாவது நாளாக லிபியாவின் தலைநகரான திரிபோலியில் ஆயுதக்குழுக்கள் தங்களுக்குள் சண்டையிட்டு வருகின்றன. தலைநகரின் தென் கிழக்கிலுள்ள பல மாவட்டங்களில் இந்த மோதல்கள் தொடர்கின்றன.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் (கோப்புப்படம்)

பொது மக்கள் உள்பட குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 20-க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெறும் மோசமான சண்டையான இந்த மோதல்கள் தோன்றுகின்றன.

அந்நகரத்தில் செயல்படும் மிகப் பெரிய, அதிக அளவு ஆயுதங்கள் வைத்திருக்கும் ஆயுதப்படை உள்பட இரண்டு ஆயுதப்படைகளின் கூட்டணிக்குள் இந்த சண்டை ஏற்பட்டிருக்கிறது.

சர்வதேச ஆதரவு பெற்ற சிரியா அரசு, அதனுடைய அதிகாரத்தை நிலைநிறுத்த முயலுகின்ற வேளையில், அங்கு பாதுகாப்பு நிலை மிகப்பலவீனமாக இருப்பதையே இது உணர்த்துகிறது.

தொடர்புடைய தலைப்புகள்