சுற்றுச்சூழல் சீரழிவை தடுக்க மேலதிக முயற்சிகள் எடுக்கப்போவதாக சீனா அறிவிப்பு

சீனாவிலுள்ள மில்லியன்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு கேடு விளைவிக்கும் சுற்றுச்சூழல் சீரழிவை தடுப்பதற்கு மேலதிக முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP

இவ்விடயம் தொடர்பாக மேம்பாட்டை கொண்டு வருவதற்காக இன்னும் அதிக அளவிலான சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கள் நடத்தப்படுவதோடு, மாசுபாட்டை உருவாக்குவோருக்கு தண்டனைகளும் அதிகரிக்கப்படும் என்று அதிபர் ஷி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளதாக சீன அரசின் சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கான உத்திக்கு சிறந்த சுற்றுச்சூழல் நடைமுறை முக்கியமான ஒன்று என்று அவர் கூறியிருக்கிறார்.

பசுமை சீனாவை உருவாக்க எல்லா நிலை அதிகாரிகளையும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்