இறந்த பிரேசில் கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி

கொலம்பியாவில் திங்களன்று ஒரு விமான விபத்தில் இறந்த பிரேசில் நாட்டு கால்பந்து விளையாட்டு வீரர்களின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகள், இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சிபேக்கோ நகரத்தில் உள்ள கால்பந்து மைதானத்திற்குக் கொண்டுவரப்பட்டன.

படத்தின் காப்புரிமை Getty Images

அரசு படையினர் சவப்பெட்டிகளை, மைதானத்திற்குக் கொண்டுவரும் போது, இறந்த விளையாட்டு வீரர்கள் அணிந்த பச்சை மற்றும் வெள்ளை நிற உடையை அணிந்தபடி சுமார் 20,000 மக்கள் மரியாதை செலுத்தினர்.

படத்தின் காப்புரிமை Getty Images

விளையாட்டு மைதானத்திற்கு வெளியே, காத்திருந்த பல்லாயிரக்கணக்கானவர்களுக்காக, இரண்டு பெரிய திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.

அந்த நிகழ்வில், சுமார் ஒரு லட்சம் பேர் அதாவது அந்த நகரத்தின் பாதி மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னதாக, சிபேக்கோ விமான நிலையத்தில் பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் இறந்த விளையாட்டு வீரர்களின் நினைவாக நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு அவர்களை மரியாதை செலுத்தினார்.