சர்வதேச சுற்றுச்சூழல் பேச்சுவார்த்தைகளில் இளையோரின் பங்களிப்புக்கு வாய்ப்பளிக்க வலியுறுத்தல்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, சர்வதேச பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க இளையவர்களுக்கும் நேரடி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று இந்த ஆண்டின் குழந்தைகளின் அமைதிக்கான சர்வதேச கௌரவ விருது பெற்ற சிறுமி தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை JERRY LAMPEN/AFP/Getty Images
Image caption கெஹாஷன் பாசு, 12 ஆம் வயதானபோதே "கிரீன் ஹோப்" என்ற அறக்கட்டளையை உருவாக்கினார்

இந்த வெறுமையான கிரகத்தில் குழந்தைகளும் தங்களுடைய வாழ்க்கையை வாழ்வதால் இது மிகவும் அவசியமானது என்று நெதர்லாந்தில் ஒரு லட்சம் டாலர் பரிசுத்தொகை பெற்றி 16 வயதான, ஐக்கிய அரபு எமிரேட்டில் வாழும் கெக்காஷான் பாசு தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை JERRY LAMPEN/AFP/Getty Images
Image caption சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஒவ்வோர் ஆண்டும் முப்பது லட்சம் குழந்தைகளின் இறப்புக்கு காரணமாக அமைகிறது

கெஹாஷன் பாசு, 12 ஆம் வயதானபோதே "கிரீன் ஹோப்" என்ற அறக்கட்டளையை உருவாக்கினார். பத்து நாடுகளில் செயல்பட்டு வருகின்ற இந்த அறக்கட்டளை நடைமுறை பணி திட்டங்களையும், குழந்தைகள் சுற்றுச்சூழல் பற்றி கற்றுகொள்ளவும் உதவுகிறது.

நோபல் பரிசு பெற்ற முகம்மது யுனுஸிடம் இருந்து கெஹ்ஷான் பாசு இந்த பரிசை பெற்றிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை JERRY LAMPEN/AFP/Getty Images
Image caption நோபல் பரிசு பெற்ற முகம்மது யுனுஸின் கைகளால் பரிசு

சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஒவ்வோர் ஆண்டும் முப்பது லட்சம் குழந்தைகளின் இறப்புக்கு காரணமாக அமைவதால், கெஹ்ஷான் பாசு செய்கிற பணி உடனடியாக செய்ய வேண்டிய பணி என்று முகம்மது யுனுஸ் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்