பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு இறுதி மரியாதை

கியூபாவின் கிழக்கு நகரான சாண்டியாகோவில் நடந்த நிகழ்ச்சியில், அதிபர் ராவுல் காஸ்ட்ரோ தனது மறைந்த சகோதரர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதி ஊர்வலத்தை வழிநடத்திச் சென்றார்.

படத்தின் காப்புரிமை AFP

அந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் மற்றும் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த வாரம் தனது 90 ஆவது வயதில் மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோவால் முன்னஎடுக்கப்பட்ட புரட்சியின் சோஷலிச கொள்கைகளுக்கு மரியாதை வழங்கப்போவதாக ராவுல் காஸ்ட்ரோ சூளுரைத்தார்

ஃபிடல் காஸ்ட்ரோவின் வேண்டுகோளுக்கு இணங்க புராதனச் சின்னங்கள் மற்றும் சாலைகளுக்கு அவரின் பெயர் சூட்டுவதை கியூபா தடை செய்யும் எனவும் அவர் அறிவித்தார்.

படத்தின் காப்புரிமை AP

மேலும் மனிதர்களை வழிபடுவதை, ஃபிடல் காஸ்ட்ரோ வலுவாக எதிர்த்தவர் என்றும் ராவுல் தெரிவித்தார்.

கியூபா புரட்சியின் பிறப்பிடமாக கருதப்படும் சாண்டியாகோவில் அவரின் சாம்பல் அடங்கிய குடுவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க ஃபிடல் காஸ்ட்ரோ- புரட்சி நாயகன் அல்லது கொடுங்கோலன் ?

கியூபா புரட்சியின் தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தார்

"சர்வதேச உணர்வை ஊட்டி வளர்த்தவர் காஸ்ட்ரோ"