அலெப்போ மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தடையாக இருப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு

சிரியாவின் அலெப்போ நகரத்தில் நடைபெற்று வருகின்ற ரத்த களரியை முடிவுக்கு கொண்டு வருகின்ற முயற்சிகளை அமெரிக்கா தடுத்து வருவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை AP

ஒரு பகுதியில் இருந்து கொண்டு அரசுக்கு எதிராக போராடுகின்ற கிளர்ச்சியாளர்கள் மீதான அழுத்தங்களை மிதமாக்கும் நோக்கில் நேரத்தை கடத்துவதற்கு அமெரிக்கா முயல்வதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சர்கே லாவ்ரோஃப் தெரிவித்திருக்கிறார்.

தீவிரவாதிகள் பின்வாங்குவதற்கான சாத்தியத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதற்காக, புதன்கிழமை திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியிருப்பதாக லாவ்ரோஃப் கூறியிருக்கிறார்.

அலெப்போவை விட்டுசெல்ல தாங்கள் தயாராக இல்லை என்று கிளர்ச்சியாளர்களே தெரிவித்திருகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்