இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 10 பேர் பலி

வடக்கு இந்தோனேசிய மாகாணமான அச்சேயில் ஏற்பட்ட ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

நிலநடுக்கத்தால் இடிந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்க கூடும் என்று கருதப்படுகிறது.

இன்று (புதன்கிமை) அதிகாலை வேளையில், 6.4 என்ற அளவில் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசிய கடற்கரை பகுதியை தாக்கியது.

படத்தின் காப்புரிமை AFP

இந்த நிலநடுக்கத்தின் மையப்பபுள்ளிக்கு தென்மேற்கு திசையில் உள்ள பிடே ஜயா மாவட்டத்தில் பல மசூதிகள், வீடுகள் மற்றும் பிற கட்டடங்கள் இடிந்து நொறுங்கி உள்ளதாக உள்ளூர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2004-ஆம் ஆண்டில், 9.2 என்ற அளவில் தாக்கிய ஒரு மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவால் அச்சே மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது.