அமெரிக்கா - கியூபா இடையேயான உறவை முன்னேற்ற டிரம்பிடம் கியூப தொழில் அதிபர்கள் வேண்டுகோள்

அமெரிக்கா மற்றும் கியூபா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள அண்மைய முன்னேற்றத்தை பின் தள்ள வேண்டாம் என்று நூற்றுக்கும் மேற்பட்ட கியூப தொழில் அதிபர்கள் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்பிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்கா மற்றும் கியூபா இடையேயான சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றை அதிகரிக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுத்தால், அது இவ்விரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என்று டிரம்புக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில், கியூபாவின் தொழில் முனைவோர் குறிப்பிட்டுள்ளனர்.

கியூபா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை, கியூபா மேலும் மேம்படுத்தித் தராவிட்டால், தான் ரத்து செய்யப்போவதாக கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் மிரட்டியிருந்தார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, கியூபா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜிய உறவு இரண்டு ஆண்டுகளுக்கு முன் மீண்டும் உருவானது.

சக அமெரிக்க அரசு அதிகாரிகளை சந்தித்து வரும் கியூபாவை சேர்ந்த அரசு அதிகாரிகள், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு நிலையை எவ்வளவு விரைவாக வலுப்படுத்தி கொள்ள முடியுமோ, அவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க தாங்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்