அலெப்போவில் போராளிகள் வசமிருந்த பகுதிகளிலிருந்து 150 பேரை பாதுகாப்பாக வெளியேற்றிய செஞ்சிலுவை சங்கம்

சிரியாவில் பழம் பெரும் நகரமான அலெப்போவிலிருந்து காயமடைந்த மற்றும் ஊனமுற்ற பொதுமக்கள் சுமார் 150 பேரை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அலெப்போவில் போராளிகள் வசமிருந்த பகுதிகளிலிருந்து 150 பேரை பாதுகாப்பாக வெளியேற்றிய செஞ்சிலுவை சங்கம்

பல நாட்களாக அங்கு தீவிர மோதல் நடந்த போது இந்த குழுவானது அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் தஞ்சம் புகுந்தது. அந்த குழுவில் இருந்த பலருக்கு உடனடி அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது.

இந்த வெளியேற்றமானது, சமீபத்தில் சிரியாவில் விரைவாக முன்னேறி வரும் அரசாங்க படையினர் போராளிகள் வசமிருந்த நகரின் கிழக்கு பகுதியிலிருந்து நடைபெற்றுள்ளது.#

இன்னும் தங்கள் வசமுள்ள பகுதிகளிலிருந்து காயமடைந்த பொதுமக்கள் வெளியேற ஐந்து நாள் யுத்த நிறுத்தத்திற்கு போராளிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்