சர்வாதிகார சக்திகளைப் போற்றும் போக்கு ஜனநாயகத்தை பலவீனமாக்கும்: ஜான் கெரி எச்சரிக்கை

சர்வாதிகார சக்திகளைப் போற்றும் போக்கு அதிகரித்து வருவது ஜனநாயகத்தை பலவீனமாக்கிவிடும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெரி எச்சரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெரி (கோப்புப்படம்)

சமீபத்திய நாட்களில் மனித உரிமைகளுக்கான ஆதரவு பலவீனமாகிறது என்றும் சர்வாதிகார சிந்தனை மற்றும் வெறுப்பு குற்றங்கள் உயர்வதை பார்க்க முடிகிறது என்று,, ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் கூட்டத்தில் பேசும்போது கெரி குறிப்பிட்டார்.

விடுதலைக்கு வித்திடும் ஒவ்வொரு துகள்களும், கொடுங்கோன்மைக்கு செல்லும் சாலையை மறைக்கும் என்று அவர் எச்சரித்தார்.