அமெரிக்கா: அளவுக்கு மீறி போதை மருந்து உட்கொள்வதால் ஓராண்டில் 50,000-க்கு மேல் இறப்பு

அளவுக்கு மீறி போதை மருந்து உட்கொண்டுள்ளதால் 50 ஆயிரத்திற்கு அதிகமானோர் கடந்த ஆண்டு இறந்துள்ளதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களால் வெளியிடப்பட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை AP

இந்த எண்ணிக்கை துப்பாக்கிச்சூட்டினாலும், கார் விபத்துக்களாலும் ஏற்பட்ட இறப்புக்களை விட அதிகமாகும்.

அளவுக்கு அதிகமாக ஹெராயின் சாப்பிட்டதால் சுமார் 13 ஆயிரம் (12,989) பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் ஏற்படும் இறப்புகளுக்கு காரணங்களை விவரிக்கும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் ஆண்டறிக்கையிலுள்ள புதிய தரவுகளின் படி, இது 23 சதவீதம் அதிகமாகும்.

படத்தின் காப்புரிமை Science Photo Library

செயற்கை போதை மருந்துகளால் ஏற்படும் இறப்புகள் மூன்று பங்கு மேல் அதிகமாகி 9 ஆயிரத்திற்கு அதிகமானோரின் இறப்புக்கு காரணமாகியுள்ளது.

அதேவேளையில், மருத்துவ ஆலோசனையின் படி வழங்கப்பட்ட வலி நிவாரணிகளை தவறுதலாக பயன்படுத்தியதால் 17 ஆயிரம் பேருக்கு அதிகமானோர் இறந்துள்ளனர்.

இதய நோய் தான் அமெரிக்காவில் அதிக மரணத்திற்கு காரணமாக இன்னும் விளங்கி வருகிறது.

தொடர்புடைய தலைப்புகள்