உலகிலேயே மிகவும் பழமையான இத்தாலி வங்கியின் பங்கு வர்த்தகம் இடைநிறுத்தம்

ஒன்பது விழுக்காட்டுக்கு அதிகமாக பங்குகள் வீழ்ச்சியடைந்ததால், இத்தாலியின் மோன்டே டேய் பாஸ்கி வங்கியின் பங்கு வர்த்தகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

முதலீட்டை உயர்த்தி கொள்வதற்கு அதிக காலம் கேட்ட இந்த வங்கிக்கு ஐரோப்பிய மத்திய வங்கி நேரம் வழங்காததை அடுத்து இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இத்தாலியின் மூன்றாவது பெரிய, உலகிலேயே மிகவும் பழமையான இந்த வங்கி, 5 பில்லியன் டாலருக்கு மேலான மதிப்பிலான மீட்புதவி நிதியை திரட்டுவதற்கான விவரங்களை இறுதி செய்வதற்கு மூன்று வார (ஜனவரி 20 வரை) கால நீட்டிப்பை கேட்டிருந்தது.

மோன்டே டேய் பாஸ்கி வங்கியை திவாலாகும் ஆபத்தில் இருந்து பாதுகாக்க, இத்தாலி அரசு தலையிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.